ஷா ஆலம், 05/09/2024 : ஷா ஆலம் பிரிவு 7 ஏரியில் காணப்பட்ட 1.5 மீட்டர் நீளமுள்ள முதலை நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விஷயத்தை ஷா ஆலம் மேயர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் மற்றும் சிலாங்கூர் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் (பெர்ஹிலிடன்) திணைக்களத்தின் இயக்குனர் டி.எஸ்.வான் முகமட் அடிப் வான் முகமட் யூசோப் உறுதிப்படுத்தினர்.
கடந்த இருநாட்களாக செக்சன் 7 ஏரியில் தென்பட்டு தேடப்பட்ட இந்த முதலையின் பிடிப்பட்ட செய்தியை கோத்தா அங்கெரிக் சட்டமன்ற உறுப்பினர் (ADN), நஜ்வான் ஹலிமியும் , அவரின் X பக்கத்தில் தெரிவித்திருந்தார்.