பத்துமலை, 05/09/2024 : இந்தியர்களின் அடையாளமாக அகல் விளக்கு, சீனர்களின் அடையாளமாக விசிறி, மலாய்க்காரர்களின் அடையாளமாக கெத்துபாட் ஆகியவற்றை கொண்டு கிட்டத்தட்ட 12.5 மீட்டர் நீளத்திற்கு
பத்துமலை தமிழ்ப்பள்ளியினர் முயற்சியால் மூவின நல்லிணக்க தேசியக் கொடி உருவாக்கப்பட்டது.
“பத்துமலை தமிழ்ப்பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் முயற்சியில் மூவின நல்லிணக்க தேசியக் கொடி உருவாக்கியுள்ளனர்.மாணவர்கள் மனதில் தேசப்பற்றை விதைக்கும் நோக்கில் இக்கொடி தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவொரு மகத்தான முயற்சியாகும். வரும் காலத்தில் இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும். இது பாராட்டுக்குரிய முயற்சியாகும்”, என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலரும் டிஎஸ்கே சங்கத்தின் தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் கூறினார்..
இம்முயற்சிக்கு உதவி புரிந்த அனைத்து தரப்பினருக்கும் பத்துமலை தமிழ்ப்பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டார் பள்ளித் தலைமையாசிரியை திருமதி சரஸ்வதி.