என் தமிழ்

பிரதமரின் ஆதிகாரப்பூர்வ இந்திய பயணத்தில் இன்று

பிரதமரின் ஆதிகாரப்பூர்வ இந்திய பயணத்தில் இன்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். மேலும் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று எனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறேன் என பிரதமர் கூறினார்.


அதன்பிறகு புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் அன்வார் இப்ராஹிம் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
எங்கள் கலந்துரையாடல் இருதரப்பு உறவுகள் மற்றும் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நல்ல ஒத்துழைப்பைத் தொட்டது. மேலும் பரஸ்பர ஆர்வமுள்ள பல விஷயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டது, என பிரதமர் தெரிவித்தார்.

Scroll to Top