சுக்மா எனப்படும் மலேசிய விளையாட்டு போட்டியில் வெறும் கண்காட்சியாக இருந்த சிலம்பக்கலை மற்றும் கபடியானது, தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சுக்மா 2024 இல் முதன் முறையாக பதக்கப்பட்டியலில்
இடம்பெறும் போட்டியாக இணைக்கப்பட்டுள்ளது. சுக்மா சிலம்ப போட்டியில் சிலம்பத்திற்கு மொத்தம் 14 தங்கம் 14 வெள்ளி மற்றும் 28 வெண்கலம் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்விரு விளையாட்டுகளும் சுக்மா 2024 மற்றும் 2026 இல் இடம்பெறும் என சுக்மாவின் உயர் செயலவை குழுவினரால் 2023 ஜூன் 12 ஆம் நாளன்று முடிவுசெய்யப்பட்டது.
இவ்விரு பாரம்பரிய விளையாட்டுகள் காலப்போக்கில் அழிந்து விடாமல், அவற்றிற்கு மடானி (Madani) அரசு தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கி பாதுகாக்கும் என்பதை இது காட்டுகிறது. சுக்மாவில் இந்தச் சிலம்பம் மற்றும் கபடியில் பங்கேற்பதன் மூலம் இந்திய இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பை வழங்குகிறது. மேலும், ஆசிய விளையாட்டு போட்டி போன்ற அனைத்துலக அரங்கில் அங்கீகரிக்கப்படும் கபடி வழி இளைஞர்கள் பங்கு கொண்டு தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் அருமையான தடமாக அமைகிறது.