என் தமிழ்

மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

மணிப்பூரில் மெய்தி, குகி என்ற இரு பிரிவினர்களுக்கும் இடையே கடந்த மே மாதம் கலவரம் வெடித்த நிலையில், அங்கே வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள தென்குபால் மாவட்டம், மோல்னோம் கிராமத்திற்குள் ஆயுதம் இந்திய பயங்கரவாதிகள் சிலர் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் அவர்கள் வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடினர். இந்தநிலையில் அங்கு ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

#Manipur
#IndiaNews
#Entamizh
#OnlineMedia
#TamilOnlineNews
#MalaysiaOnlineNews
#MalaysiaTamilOnlineNews

Scroll to Top