ஹீரோவா? ஹீரோயினா? போட்டியில் ரிம 500 வரை வெல்லும் வாய்ப்பு

ஹீரோவா? ஹீரோயினா? போட்டியில் ரிம  500 வரை வெல்லும் வாய்ப்பு

17july_astro

இன்று ஜூலை 17-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை டி.எச்.ஆர் ராகாவில் இடம்பெறும் ஹீரோவா? ஹீரோயினா? போட்டியில் கலந்து கொண்டு ரிம  500 வரை வெல்லும் வாய்ப்பு நேயர்களுக்காகக் காத்துக் கொண்டிருகின்றது.

ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை இடம்பெறும் இப்போட்டி ராகாவின் அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கும் ‘கலக்கல் காலை’, ‘ஹலோ நண்பா’, ‘ஹைப்பர் மாலை’ மற்றும் ‘இனிமை@ராகா’ நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம்பெறும்.

இந்நிகழ்ச்சிகளின் போது இப்பொழுது எங்களுக்கு அழைத்து இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பாளர் சொன்ன பிறகு நேயர்கள் அழைக்க வேண்டும். அதன் பிறகு, முதல் அழைப்பாளரிடம் ராகாவின் அறிவிப்பாளர் ஹீரோ அல்லது ஹீரோயின் தேர்வு செய்ய சொல்வார்கள். தேர்வு செய்த பிறகு 4 பாடல்களின்  துணுக்கு (snippet) ஒலியேற்றப்படும். இறுதி பாடலின் துணுக்கு முடிந்த பிறகு, அந்த நான்கு பாடலில் நடித்த முன்னணி நடிகர் அல்லது நடிகை பெயர் சொல்ல வேண்டும்.

ஹீரோ என்று தேர்வு செய்தால் அப்பாடல்களில் நடித்த நடிகர்களின் பெயரைச் சொல்ல வேண்டும். அப்படி ஹீரோயின் என்றால்  அப்பாடல்களில் இடம்பெற்ற நடிகைகளின் பெயரைச் சரியாகச் சொன்னால் ரிம 500 வெல்லலாம். அவ்வாறு சொல்ல முடியாமல் ஒன்று, இரண்டு அல்லது மூன்று விடைகள் மட்டுமே சரியாக இருந்தால் ஒவ்வொரு சரியான  விடைக்கும் ரிம 100 வழங்கப்படும்.

மேல் விவரங்களுக்கு raaga.fm அகப்பக்கத்தை நாடுங்கள்.