இன்று 17/07/2016 தேசிய வகை பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளியின் மறு சீரமைக்கப்பட்ட இணைக்கட்டிடம் திறப்பு விழாவும் பள்ளியின் 70ஆம் ஆண்டின் தொடக்க விழாவும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மத்திய சுகாதார துறை அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் மற்றும் கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோ P.கமலநாதன். ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ T.மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். டாக்டர் சுப்ரா புதிய இணைக்கட்டிடத்தை திறந்து வைத்தார்.
சுமார் RM 250,000 அரசாங்க உதவிநிதியைக் கொண்டு இப்பள்ளி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 287 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியின் இணைக்கட்டிடம் 4 புதிய வகுப்பறைகள், ஒரு அறிவியல் கூடம், நூல்நிலையம், கலைக்கல்வி வகுப்பு, சிறிய மண்டபம் ஒன்றையும் உட்படுத்தி மறுசீரமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.