பகடிவதைக்கு ஆளாகிய நவீனின் கொடூரமான மரணத்தை கண்டித்து அஞ்சலி செலுத்தும் விதமாகவும் பகடிவதை கொடுமைக்கு எதிராகவும் மலேசியாவில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட பைக்கர்ஸ் கிளப்புகளும் இன்று ஒன்றிணைந்து ஒரு பெரிய பேரணி நடத்தின. இதில் கலந்து கொண்ட அனைவரும் பகடிவதை கொடுமைக்கு எதிராக பேசினர். நவீனின் இறப்பே இத்தகைய மரணத்தில் கடைசியாக இருக்க வேண்டுன் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.