சுக்கிம் 4 2017 மலேசிய இந்தியர்களின் விளையாட்டு திருவிழா கடந்த ஜூலை 04 2017 அன்று துவஙகி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 06 தேதி துணை பிரதம மந்திரி ஒரு வண்ணமிகு நிகழ்ச்சியில் சுக்கிம் 4 ஐ பல மலேசிய இந்திய தலைவர்கள் முன்னிலையில் அதிகாரப் பூர்வமாக துவஙகி வைத்தார்.
கடந்த 5 நாட்களாக UPSI விளையாட்டு வளாகத்தில் பல வகையான விளையாட்டு போட்டிகளில் இளைஞர்களும் இளைஞிகளும் ஆர்வமுடன் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றனர். இந்த சுக்கிம் 4 போட்டியில் பழைய சாதனைகளை முறியடித்து பலர் புது சாதனைகளை நிகழ்த்தினர். இந்த வருடம் சுக்கிம் 4 டேக்குவா போட்டிகள் அறிமுகப் படுத்தப்பட்டன.
இப்படி பல சிறப்புகளுடன் நடைபெற்ற சுக்கிம் 4 2017 விளையாட்டு போட்டிகள் நாளை 09/07/2017 உடன் முடிவுறுகின்றன. இதை ஒட்டி 09/07/2017 காலை 10.30 மணிக்கு மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் துறை துணை மந்திரி பங்குபெறும் சுக்கிம் 4 நிறைவு விழா UPSI விளையாட்டு வளாகத்தில் நடைபெற இதற்கு முன்னர் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் அணிகளுக்கு இடையே கபடி இறுதிப் போட்டி காலை 08 மணிக்கு துவங்கி நடைபெற இருக்கிறது. காலை 08.30 மணிக்கு சிலாங்கூர் மற்றும் பேராக் அணிகளுக்கு இடையேயான கால்பந்து இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. நிறைவு விழாவில் MISCF மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ T. மோகன் அவர்களும் கலந்து கொள்கிறார்.