மலேசியாவிற்கான புதிய அமரிக்கத் தூதராக நியமிக்கப்படிருக்கும் மேதகு கமலா ஷிரின் அவர்கள் மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களை மரியாதை நிமித்தமாக அவருடைய அலுவலகத்தில் நேற்று 16/03/2017 அன்று சந்தித்தார். இச்சந்திப்பில், டத்தோஸ்ரீ அவர்கள் மேதகு கமலா அவர்களிடம் மலேசிய சுகாதாரம் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார். அமெரிக்க தூதரக அதிகாரிகளும் உடன் இருந்தனர்.