ஜிகர்தண்டா ரிலீஸ் தேதி மிண்டும் தள்ளிவைப்பு

ஜிகர்தண்டா ரிலீஸ் தேதி மிண்டும் தள்ளிவைப்பு

Jigarthanda

சித்தார்த்-லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தை ‘பீட்சா’ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை வருகிற ஜுலை 25-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது, இப்படத்தை ஆகஸ்ட் 1-ந் தேதிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் கூறும்போது,

சமீபத்தில் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கொஞ்ச காலத்திற்கு பிறகு திரையரங்கிற்கு கிடைத்த பெரிய வெற்றி படமாக தியேட்டர் உரிமையாள்கள் கருதுகிறார்கள்.

சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தை இம்மாதம் 25-ந் தேதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் படத்தை பார்த்த விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ‘ஜிகர்தண்டா’ படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு வாரம் தள்ளி வெளியிட்டால் அதிக தியேட்டர் கிடைப்பதோடு படமும் பெரிய வெற்றி பெறும் என்று கருதினார்கள்.

ஆகவே, அவர்களின் கருத்தை மனதில் வைத்து படம் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கில் ஜிகர்தண்டா படத்தை ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிட உள்ளோம். யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் படம் வாங்கிய அனைவரும் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நல்லெண்ணத்தில் இவ்வாறு முடிவெடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.