என் தமிழ்

காப்பார் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் ராமா லீலா மறைந்தார் – தலைவர்கள் அஞ்சலி

09mar18

நேற்று 09/03/2017 அன்று காப்பார் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ம.இ.கா மகளிர் பிரிவின் முன்னாள் துணைத் தலைவியும் பிரபல சமூக சேவகியும் முன்னாள் மத்திய செயலவை உறுப்பினருமான சகோதரி டாக்டர் லீலா ராமா அவர்கள் மரணமடைந்தார். அன்னாருக்கு தலைவர்களும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தினார்கள். டாக்டர் சுப்ரா,திரு. P.கமலநாதன், திரு. T. மோகன், திரு. அரவிந்தன் முதலிய தலைவர்கள் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். 

பிரபல சமூகச் சேவகியுமான டாக்டர் ராமா லீலா அவர்களின் மறைவானது மிகவும் வருத்தத்திற்குரியது. இவ்வேளையின் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்பதோடு அன்னாரைப் பிரிந்து துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் இவ்வேளையில் பதிவு செய்கிறேன். இவ்வாறு ம.இ.கா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரணியம் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

09mar14 09mar15 09mar16 09mar17

Scroll to Top