கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அருள்பாலித்து வந்த பூச்சோங் பிரிமா ஸ்ரீ மகா சக்தி தேவி ஆலயத்திற்கு மாற்று நிலம் வேண்டி மித்ரஜெயா மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப்போராட்டத்தில் மஇகாவின் உதவித்தலைவர் டத்தோ டி.மோகன் ,மஇகா தேசிய இளைஞர் பகுதி துணைத்தலைவர் தினாளன்,செயலாளர் அர்விந்த்கிருஷ்ணன், இளைஞர் படையினர்,சுற்றுவட்டார சமுதாயப்பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தப்போராட்டத்தின் எதிரொலியாக தற்காலிக ஆலயமும் நிலை நிறுதப்பட்டுள்ளது.