என் தமிழ்

Online-Tamil-News-Malaysia

வெள்ளம் பாதித்த மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகை வந்து சேர்ந்தது

Online-Tamil-News-Malaysia

ஜனவரி 05, தமிழகத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதித்தது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்கு ரூ.5000 நிவாரண உதவியும், குடிசைகளை இழந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 30 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கப்படுகிறது. வெள்ள நிவாரண நிதி ரூ.5000 டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து பொது மக்கள் ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை எடுத்தனர்.

Scroll to Top