என் தமிழ்

Online-Tamil-News-Malaysia

அறிவிப்பாளர் ராம் மற்றும் ரேவதி தொகுத்து வழங்கும் ஹைப்பர் மாலை

Online-Tamil-News-Malaysia

உங்களின் மாலை பொழுதை மேலும் உற்சகமாக ஆகுவதற்கு டி.எச்.ஆர் ராகாவில் அறிவிப்பாளர் ராம் மற்றும் ரேவதி ‘ஹைப்பர் மாலை’ எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றார்கள். மாலை மணி 3.00 தொடக்கம் இரவு 7.00 மணி வரை ஒளிப்பரப்படும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் வெவ்வெறு தலைப்புகளை ஒட்டி நேயர்களுக்குப் பல அரிய தகவல்கள் இந்நிகழ்ச்சியின் வாயிலாக வழங்கப்படுகின்றது. மேலும், வேலை முடிந்து வீடு திரும்பும் பொழுது சாலைப் போக்குவரத்து நெரிசலில் பயணிக்கும் நேயர்களுக்கு இனிமையான பாடல்களும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும். நேயர்களும் அறிவிப்பாளர் ராம் மற்றும் ரேவதி உடன் சாலைப் போக்குவரத்து நெரிசல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, காற்பந்து விளையாட்டுக் குறித்த தகவல்களும் ‘ஹைப்பர் மாலை’ நிகழ்ச்சியில் கேட்கலாம். ஆகவே, ஒவ்வொரு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை மாலை மணி 3.00 தொடக்கம் இரவு 7.00 மணி வரை ‘ஹைப்பர் மாலை’ நிகழ்ச்சியைக் கேட்க மறவாதீர்கள்.

மேல் விவரங்களுக்கு http://raaga.thr.fm/ அகப்பக்கத்தை நாடுங்கள்.

Scroll to Top