என் தமிழ்

Tamil News Malaysia

8 வயது சிறுவன் ஒருநாள் போலீஸ் கமிஷனர்

Tamil News Malaysia

டிசம்பர் 17, ஐதராபாத்தில் ஒருநாள் போலீஸ் கமிஷனராக 8 வயது சிறுவனை அமர்த்தி அவனது ஆசையை போலீசார் நிறைவேற்றியுள்ளனர். ஆந்திர மாநிலம், நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த மடிப்பள்ளி ரூப் அவ்ரோனா
என்ற 8 வயது சிறுவன் மரபு வழியான ரத்த தொடர்புடைய தலாசீமியா என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். தற்போது 2-வது வகுப்பு படித்து வரும் ரூப்பிற்கு போலீஸ் கமிஷனராக ஆகவேண்டும் என்பது நீண்ட
நாள் கனவாகும். மாதமொருமுறை மாற்று இரத்தம் செலுத்திகொள்ளும் சிகிச்சை பெற்றுவரும் ரூப், தனது ஆசை தொடர்பாக ஐதராபாத் போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதி இருந்தான். அதனை தொடர்ந்து, சிறுவன்
ரூப்பின் ஆசையை ஐதராபாத் போலீசார் நேற்று நிறைவேற்றி வைத்தனர்.

Scroll to Top