டிசம்பர் 17, விமல் – நந்திதா ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் அஞ்சல. இது விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் தொடர்பான படப்பிடிப்பு மதுரை, தேனி அருகே உள்ள கிராமங்களில் நடந்தது. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கும் நந்திதாவுடன், படப்பிடிப்பை காண வந்த கிராம மக்கள் கலகலப்பாக பழகினார்கள். அவர்களுடன் ‘செல்பி’யும் எடுத்துக் கொண்டார். பல நாட்கள் படப்பிடிப்பு நடந்ததால் கிராம மக்களுக்கும், நந்திதாவுக்கும் நட்பு அதிகமானது. அவரை தங்கள் கிராமத்து பெண்களில் ஒருவராகவே கருதத் தொடங்கினார்கள். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்த போது நந்திதாவை சந்தித்த கிராமத்துக்கு பெண்களில் சிலர், எங்கள் வீட்டுக்கு நீ சாப்பிட வர வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டனர். நந்திதா சிரித்து சமாளித்தார். என்றாலும் அவர்கள் விடவில்லை. எங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் அடுத்த நாள் இந்த ஊர் பக்கம் படப்பிடிப்புக்கு வர முடியாது என்று உரிமையோடு கோபப்பட்டனர்.
கிராம மக்கள் நந்திதாவுக்கு பாசம் பொழிந்தனர்
