டிசம்பர் 17, நமது நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், சுவிஸ் என்றழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ரகசிய கணக்குகள் தொடங்கி, பல்லாயிரக்கானக்கான கோடி பதுக்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்துகிறது. இந்த நிலையில், சுவிஸ் நாட்டில் 2,600 வங்கிக்கணக்குகளும், 80 பாதுகாப்பு பெட்டகங்களும் செயல்படாத நிலையில்,
கேட்பாரற்று கிடப்பவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிக்கணக்குகளில் 4 கணக்குகள் இந்தியர்களுடையவை. அவை, மும்பை பியர் வாச்செக், டேராடூன் பகதூர் சந்திரசிங், பாரீஸ் மோகன்லால், கிஷோர் லால்
ஆகியோருடையவை. இவர்களின் வங்கிக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள தொகை விவரம் தெரிய வரவில்லை. இவர்களின் வாரிசுகள், 5 ஆண்டுகளுக்குள் இவற்றின் உரிமையை கோரலாம். இதை சுவிஸ் வங்கியியல் குறைதீர்மன்றம், சுவிஸ் வங்கியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியர்களின் வங்கி கணக்குகள் சுவிஸ் நாட்டில் கேட்பாரற்ற நிலை
