நவம்பர் 26, அமெரிக்கா, பிரான்ஸ், ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபடத் தயார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம்
செவ்வாய்க்கிழமை சுட்டு வீழ்த்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் ஓர்லோவ் பாரீஸில் கூறும்போது,
ஐஎஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அனைத்து நாடுகளின் கூட்டுப் படையில் எங்கள் நாட்டு ராணுவ வீரர்களையும் ஈடுபடுத்த தயாராக உள்ளோம். இந்தப்
படையில் துருக்கி சேர்ந்தாலும் வரவேற்போம் என்றார்.
Previous Post: 3 மொழிகளில் வெளியாகும் வீரப்பனின் வாழ்க்கை படம் சர்ச்சை