நவம்பர் 25, சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து, ‘கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகியுள்ளது. பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா இந்த படத்தை இயக்கி உள்ளார். இதில் வீரப்பன் கதாபாத்திரத்தில் சந்தீப் பரத்வாஜ் என்ற கன்னட நடிகர் நடித்துள்ளார். வீரப்பனை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ளார். இவர் மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். ராஜ்குமாரை வீரப்பன் காட்டுக்குள் கடத்தி சென்று 107 நாட்கள் சிறை வைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் யாக்னா ஷெட்டி நடித்துள்ளார். வீரப்பனால் சுட்டுக்கொல்லப்பட்ட கர்நாடக போலீஸ் சூப்பிரண்டு வேடத்தில் ராக்லைன் வெங்கடேஷ் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. படம் குறித்து ராம்கோபால் வர்மா கூறியதாவது:-சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை நிகழ்வுகள் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் கொண்டவை. அவனது வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. அந்த தூண்டுதலால் இந்த படத்தை எடுத்துள்ளேன். வீரப்பன் தனது கடத்தல் தொழிலுக்காக 900 யானைகளை கொன்றுள்ளான். அவனை பிடிக்க தமிழக, ஆந்திர, கர்நாடக அரசுகள் ரூ.700 கோடி செலவிட்டு உள்ளன.
Previous Post: சிங்கப்பூர் தமிழர் ஹோட்டலில் மசால் தோசை சாப்பிட்ட மோடி