பொழுதுபோக்கு

தீபாவளித் திருநாளை முன்னிட்டு மலேசியாவின் முதன்மை நிலை தமிழ் வானொலி டி.எச்.ஆர் ராகா இவ்வாண்டும் தங்களுடைய ரசிகர்களுக்காகச் சிறப்பு படைப்புகளைக் கொண்டு வரவுள்ளது. டி.எச்.ஆர் ராகாவின் A&A தீபாவளி கொண்டாட்டம் கலைநிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டியில் அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2017, டிஎச்ஆர் ராகாவின் “டி.எச்.ஆர் ராகாவின் A&A தீபாவளி கொண்டாட்டம்” நிகழ்ச்சியுடன் மிகப் பிரம்மாண்டமான முறையில் முடிவுற்றது. இந்நிகழ்ச்சி அக்டோபர் 18-ஆம் தேதி மாலை 6-மணிக்கு அஸ்ட்ரோ வானவில் ஒளியேறவுள்ளது. டிஎச்ஆர் ராகாவின் அறிவிப்பாளர்களான

இவ்வாண்டு தீபாவளிக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக நிகழ்ச்சிகளைக்  கொண்டு வருகின்றது ஆஸ்ட்ரோ

இவ்வாண்டு தீபாவளிக்கு ஆஸ்ட்ரோ சந்தாதரர்கள் பல வகையான நிகழ்ச்சிகளைத் தங்களுடைய குடும்பத்தினர்களுடனும் நண்பர்களுடனும் இணைந்து ஆஸ்ட்ரோ கோ மற்றும் NJOI Nowஉட்பட அனைத்து திரைகளிலும் கண்டு மகிழலாம். ஆஸ்ட்ரோ வானவில்,ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை, ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி, போலிஒன் எச்.டி, தாரா எச்.டி, ஆஸ்ட்ரோ தங்கத்திரை மற்றும் டி.எச்.ஆர் ராகாவின் சமூக வளத்தளங்களில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் வலம் வரவுள்ளது. அண்மையில் 4 நாட்களுக்கு நடைபெற்ற அனைத்துலக இந்திய வர்த்தக விழாவின் சிறப்பு காட்சி தொகுப்புகளுடன் நடிகை ராய் லஷ்மி, பிண்ணனிப் பாடகர் சாதனா சர்கம், ஹரிணி மற்றும் நம் நாட்டின் கலைஞர்கள் கலந்து கொண்ட தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியுடன்

“எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி

மலேசியத் தமிழர்களிடையே குறும்படங்கள் மீதான ஆர்வம் நம்ப முடியாத அளவுக்கு அதிக‌ரித்திருப்பது ஆரோக்கியமான மாறுதல் என்றே கூறலாம். தமிழில் தயாராகும் குறும்படங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகள் பெற்று வருவது பெருமைக்குறியது ஒன்றாகும். திரைப்படத் தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்ட்ரோ வானவில் பல குறும்படப் போட்டிகளை நடத்திவருகிறது. வெற்றிகரமாக நடந்து முடிந்த மகளிர் மட்டும் குறும்படம் போட்டியைத் தொடர்ந்து இம்முறை குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வண்ணம் “எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி ஒரு குறும்படப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. போட்டி விபரங்கள் : போட்டி தவணை 03 அக்டோபர் 2017 தொடங்கி

SD புவனேந்திரனின் ஆசான் திரைப்படம் நவம்பர் 30 திரைக்கு வருகிறது

டத்தோ N.K.சுந்தரம் வழங்கும் ஹரிதாஸ் மிரட்டும் SD புவனேந்திரனின் “ஆசான்” திரைப்படம் எதிர்வருகின்ற நவம்பர் மாதம் 30ஆம் தேதி மலேசிய திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. SD புவனேந்திரனின் முந்தைய படைப்பான  மறவன் போலவே இந்த ஆசான் திரைப்படமும் மலேசியாவில் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களிடமும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணிதப் பேராசிரியர் ஒருவர் தன் மகளை காப்பாற்ற நடத்தும்  போராட்டமே ஆசான் திரைப்படத்தின் ஒன் லைனர் என திரைப்படக் குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். ஆசான் குழுவிற்கு நல்வாழ்த்துக்கள். இந்த அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்னரே என் தமிழ் தனது முகப் புத்தக பக்கத்தில் அறிவித்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

என் வீட்டுத் தோட்டத்தின் வெற்றி - புதிய கதை களம் புதிய விளம்பர யுக்தி திரைப்படக் குழுவினரின்  உழைப்பு ஈடுபாடு

மலேசியா முழுதும் இன்று எல்லோரும் பேசும் ஒரே விஷயம் என் வீட்டுத் தோட்டத்தில் மலேசிய தமிழ்த் திரைப்படம் பற்றித்தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மலேசிய தமிழ் இணையவாசிகள் அனைவரும் கண்டிப்பாக இந்த திரைப்படத்தை பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது பேஸ்புக்கையும் வாட்சப்பையும் இன்ஸ்டாக்ராமையும்  உலா வருகையில் புரிகிறது. நாட்டில் உள்ள அனைத்து திரையுலக பிரபலங்களும் புதிதாக திரைத்துறைக்கு வந்தவர்களும் வரும் ஆர்வம் உள்ளவர்களும் என அனைவரும் என் வீட்டுத் தோட்டத்தில் திரைப்படத்தை மிகவும் சிலாகித்து பாராட்டுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் படத்தில் ஒவ்வொன்று பிடித்திருக்கிறது. சிலருக்கு பல விஷயங்கள் பிடித்திருக்கிறது. ஆனால் எல்லோரும் சொல்லும் விஷயம் பயம் என்பதுதான். அனைவரையும் படம்

அஸ்ட்ரோ வர்த்தக விழாவில் களைக் கட்டியது ராகாவின் கலைநிகழ்ச்சி

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டியில் அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2017, டிஎச்ஆர் ராகாவின் “டி.எச்.ஆர் ராகாவின் A&A தீபாவளி கொண்டாடுவோம்” நிகழ்ச்சியுடன் மிகப் பிரம்மாண்டமான முறையில் முடிவுற்றது. ஆனந்தா, உதயா, ராம், ரேவதி, சுரேஷ், கவிமாறன், கீதா, அகிலா, ஷாலு, ஜெய், யாசினி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இடைவிடாத ஆடல் பாடல் என பல அற்புதமான படைப்புகள் படைத்தார்கள். அதை வேளையில் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்களுடன் இணைந்து அண்மையில் நடைபெற்ற ராகாவின் ஸ்டார் போட்டியின் இறுதிச்சுற்றின்

சாதனை முத்துக்களுக்கு அங்கீகாரம் வழங்கி கெளரப்படுத்திய  ‘ஆஸ்ட்ரோ உறுதுணை விருது’

கலை, கல்வி, சுகாதாரம் என சமுதாய சேவைகளில் அதிகமாக செயல்பட்டுவரும் ஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டு குழு, நமது சமுதாயத்திற்கு நற்பணியாற்றிய நல்லுள்ளங்களையும், சமுதாய வளர்ச்சிக்கு பங்களித்த சாதனையாளர்களையும் சிறப்பு செய்யும் வகையில், ‘ஆஸ்ட்ரோ உறுதுணை விருது’ எனும் அங்கீகாரம் வழங்கி கெளரப்படுத்தியது. இந்த விருதளிப்பு விழா, செப்டம்பர் 23-ஆம் தேதி ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெறவுள்ள அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம்  நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இடம்பெற்றது. கல்வி, சமூகம், புத்தாக்கம் என்று பல துறைகளில் சாதனைக்கொடி நாட்டி, சமூக மேம்பாட்டிற்கு நற்பணி சேவைகளை ஆற்றிவரும் சில பிரமுகர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு மரியாதை

ராஜா த ஒன் மேன் - இசை நிகழ்ச்சி : பாடகர் மனோ-பத்திரிக்கையாளர் சந்திப்பு

மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் வழங்கும் இசைஞானி இளையராஜாவின் ராஜா த ஒன் மேன் என்ற இசை நிகழ்ச்சி எதிர்வருகின்ற அக்டோபர் 07 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள ஆக்சியாடா அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியை முன்னிட்டு பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் திரு மனோ அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று 23/09/2017 காலை ஹோட்டலில் நடைபெற்றது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் குழுமத்தின் தலைவர் திரு ஷாகுல் ஹமீத் பேசுகையில் ராஜா த ஒன் மேன் இசை நிகழ்ச்சி சுமார் 5 மணி நேரம் நடக்கும் என்று தெரிவித்தார். மேலும் நேயர் விருப்பமாக

நடிகை லஷ்மி  ராய்  ஆஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்

ஆஸ்ட்ரோவின் மாபெரும் 3-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. செப்டம்பர் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், இவ்விழாவை நடிகை ராய் லஷ்மி  அதிகாரப்பூர்வமாகத் துவங்கி வைத்தார். இவருடன் அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் நிர்வாக குழும மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, அஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர், முருகையா வெள்ளை, இந்தியத் தூதரகத்தின் முதல்

ஆஸ்ட்ரோ கலைஞர்களுடன் பின்னணி பாடகி சாதனா சர்கம் கலந்து கொண்ட ‘என்றுமே ராஜா’ கலைநிகழ்ச்சி

ஆஸ்ட்ரோவின் மாபெரும் 3-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி செப்டம்பர் 21-ஆம் தேதி இனிதே தொடங்கி எதிர்வரும் 24-ஆம் தேதி வரை ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. முதல் Astro Circle ஏற்றி நடத்திய புதையல் தேடும் போட்டி, ஆடை அலங்காரம், டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் நேரடி வெளி ஒலிபரப்பு என பல நிகழ்ச்சிகள் காலை தொடங்கி மாலை வரை இடம்பெற்றது. அதன் பிறகு, இரவு 7 மணிக்கு ‘என்றுமே ராஜா’ எனும் கலைநிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது.