ஆகஸ்டு 27, துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடல் நடுவே சொகுசு ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மம்சார் கடல் பகுதியில் மிதக்கும் சொகுசு ஹோட்டல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஒரு நாள் கட்டணமாக 1089 டாலர் வரை வசூலிக்கப்படுகிறது. பெரிய படுக்கை வசதி கொண்ட அறைகள், மீன்பிடி பகுதி என பல்வேறு வசதிகள் இந்த மிதக்கும் ஹோட்டலில் உள்ளன. கடல் நடுவே தங்கி ரசிக்கும் ஆர்வமுடைய சுற்றுலா பயணிகள் அதிகம் இங்கு வருகின்றனர். அத்துடன் இங்கு மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துபாயில் கடல் நடுவே சொகுசு ஹோட்டல்
