ஆகஸ்டு 27, கொச்சியில் நேற்று பயணிகள் படகும் மீன்பிடி படகும் மோதியதில் 6 பேர் இறந்தனர். கொச்சியில் இருந்து போர்ட் கொச்சிக்கு நேற்று பகல் ஒரு பயணிகள் படகு புறப்பட்டது. இதில் 30 மேற்பட்ட பயணிகள் இருந்தனர். படகு புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த வழியாக ஒரு மீன்பிடி படகு வந்தது. அதிவேகமாக வந்த மீன்பிடி படகு மின்னல் வேகத்தில் பயணிகள் படகின் மீது மோதியது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு கரையில் இருந்தவர்களும், மீனவர்களும் ஓடி வந்தனர். காயலில் மூழ்கி உயிருக்கு போராடிய 25–க்கும் மேற்பட்டவர்களை மீட்டனர்.
கொச்சியில் பயணிகள் படகு மீது மீன்பிடி படகும் மோதியது
