என் தமிழ்

தான் தூய்மையானவர் என கூறுவதை பிரதமர் நிறுத்தவேண்டும்

nawab

ஆகஸ்டு 26, எஸ்.பி.ஆர்.எம் எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து விசாரனை இன்னும் முடியவில்லை என்று தனது அறிக்கையில் கூறி இருக்கிறது. மேலும் நன்கொடையாகப் பெறப்பட்ட ரிம260 கோடி தொடர்பாக நஜிப்பிடம் விளக்கம் பெறப்படும் மென்றும் ஆணையம் கூறி உள்ளது, இந்நிலையில் நஜிப் தான் செல்லும் இடங்களில் எல்லாம் எஸ்.பி.ஆர்.எம் தன்னை தூய்மையானவன் என கூறிவிட்டதாக எவ்வாறு கூறுகிறார். அவர் அப்படிக் கூறுவதை உடனே நிறுத்த வேண்டிமென்று வட பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஜ.செ.கவின் டோனி புவா கூறினார்.

Scroll to Top