என் தமிழ்

AI Malaysia திட்டம் அறிமுகம் : 2030 செயற்கை நுண்ணறிவு இலக்கை நோக்கி மலேசியா புதிய முன்னேற்றம்

புத்ராஜெயா, 28 ஜூலை 2026 : மலேசியாவின் 2030 செயற்கை நுண்ணறிவு (AI) இலக்கை நோக்கிய முக்கிய முன்னேற்றமாக, AI Malaysia திட்டத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். சுமார் 100,000 இளைஞர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த முயற்சி, இளைஞர்களை தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களாக மட்டுமன்றி, புதுமைகளை உருவாக்குபவர்கள், மதிப்பை உருவாக்கும் தொழில்முனைவோர் மற்றும் நாட்டின் எதிர்கால வளர்ச்சியை வழிநடத்தும் திறனாளர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

தேசிய செயற்கை நுண்ணறிவு செயல்திட்டம் 2026–2030 (National AI Action Plan 2026–2030) அமல்படுத்தப்படுவதில் AI Malaysia முக்கிய பங்காற்றும் என்றும், மலேசிய செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனம் (Malaysian AI Security Institute) வழியாக பாதுகாப்பான, பொறுப்புமிக்க மற்றும் நம்பகமான AI பயன்பாட்டை ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாட்டின் பொருளாதாரம், கல்வி, தொழில் மற்றும் அரசுப் பணிகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பு மற்றும் நெறிமுறை பயன்பாட்டிற்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளிப்பதாக அவர் கூறினார்.

“டிஜிட்டல் எதிர்காலம் அனைவருக்கும் சொந்தமானது. பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் போட்டித்திறன் மிக்க மலேசியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்தார்.

Scroll to Top