எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்ல மீண்டும் அனுமதி

எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்ல மீண்டும் அனுமதி

evarest

ஆகஸ்டு 25, கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி நேபாளத்தில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்தனர். உலக புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் உள்ளது. பூகம்பம் ஏற்பட்ட பிறகு எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்ல அனுமதி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தது. தற்போது சுற்றுலா தொழிலுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் வகையில் எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்ல நேற்று முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 மாதத்தில் இதுவரை 382 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.