கவர்ச்சி நடனம் ஆட சோனியா அகர்வால் முடிவு
ஆகஸ்டு 25, நடிகை சோனியா அகர்வால் முதல்முறையாக ஜம்னா ப்யாரி என்ற மலையாள படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். தொடர்ந்து அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ‘டான்ஸ்’ ஆட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. காதல் கொண்டேன் படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கதாநாயகி வாய்ப்புகளை எதிர்பார்த்து வந்த அவருக்கு அந்த வாய்ப்புகள் வராததால் ஏமாற்றம் அடைந்தார். கதாநாயகியாகத்தான் நடிப்பது என்ற அவருடைய முடிவை மாற்றினார். இனிமேல் கவர்ச்சி நடனம் ஆடுவது என்ற முடிவுக்கு அவர் வந்து இருக்கிறார்.