என் தமிழ்

இங்கிலாந்தில் விமான கண்காட்சியின் போது விபத்து

plane-crash

ஆகஸ்டு 24, இங்கிலாந்தில் தெற்கு பகுதியில் ஷோர்ஹம் என்ற இடத்தில் விமான கண்காட்சியின் போது தவறுதலாக விமானம் ஒன்று சாலையில் சென்ற கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தால் சாலையில் கரும் புகை எழுந்ததை கண்ட பார்வையாளர்கள் அலறியடித்து இங்கும் அங்கும் ஓடினர். இந்த சம்பவத்தை அடுத்து ஏ. 27 சாலை மூடப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Scroll to Top