ஸ்ருதி ஹாசன், ரம்யா நம்பிசனைத் தொடர்ந்து, லட்சுமி மேனனும், சினிமாவில் பின்னணி பாட ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு, தான் சந்திக்கும் இசையமைப்பாளர் களிடம் சிலரைப் போன்று சினிமா பாட்டு பாடி சான்ஸ் கேட்காமல், கர்நாடக சங்கீத பாடல்களான கீர்த்தனைகளை பாடிக் காட்டுகிறாராம் லட்சுமி மேனன். இதுபற்றி அவர் கூறுகையில், ‘நான்காம் வகுப்பில் இருந்தே, முறைப்படி சங்கீதம் பயிலத் துவங்கி விட்டேன். அதனால், வர்ணம், கீர்த்தனை புத்தகத்தில், பாடங்களில் எதை பாடச் சொன்னாலும் சரளமாக பாடுவேன். எனக்கு சங்கீத பாடம் நன்றாக தெரியும் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவே, கர்நாடக சங்கீத பாடங்களை பாடி காட்டுகிறேன்’ என்கிறார்.
Previous Post: கவர்ச்சிக்கு தடையில்லை: சுனைனா
Next Post: விமான விபத்து:புடின்-ஒபாமா ஆலோசனை