என் தமிழ்

விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து

as

ஜூலை 27, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிறியரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

விமானத்தில் ஏற்பட்ட தீ அங்கிருந்த வீடுகள் மற்றும் வாகனங்களிலும் பரவியது. தீயணைப்பு துறையினர் வீடுகள் மற்றும் விமானத்தில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர். விமானத்தில் பயணம் செய்தவர்கள் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள இஸு ஓஷிமா தீவுக்கு சென்று அங்கு விமானம் ஓட்டும் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Scroll to Top