ஜூலை 16, ஏமன் நாட்டில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், அதிபர் மன்சூர் ஹாதி, சவுதிக்கு ஓட்டம் பிடித்தார்.
அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்காக ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த மார்ச் 26-ந் தேதி முதல் சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகளின் கூட்டுப்படைகள் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
ஏமனில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஒபாமாவின் தொலைபேசி பேச்சு காரணமாக ஏமனில் சண்டையை முடிவுக்கு கொண்டு வர சவுதி பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.