ஜூலை 6, சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதிகள், ராணுவம், தீவிரவாதிகள் இடையே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பால்மைரா நகரில் உள்ள புராதன சின்னம் அமைந்துள்ள பகுதியில் வைத்து ராணுவ வீரர்கள் 25 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த வீடியோவை ஐஎஸ் தீவிரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
25 பேரை சுட்டுக் கொன்ற வீடியோவை இணையதளத்தில் வெளியிட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்
