ஜூன் 19, கேரள அரசு தங்கள் மாநிலத்துக்கு தேவையான சுமார் 80 சதவீத காய்கறிகளை அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறது. தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேகி நூடுல்சில் ரசாயனப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கேரளா அரசு காய்கறிகளின் தரத்தையும் ஆய்வு செய்ய முடிவு செய்தது.
அப்போது தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளில் அதிக அளவுக்கு பூச்சிக்கொல்லிகள் சாகுபடிக்கு பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.