டாக்டர் சுப்ரா மற்றும் சரவணன் உட்பட 15 பேர் ம.இ.கா வில் இருந்து நீக்கம்

டாக்டர் சுப்ரா மற்றும் சரவணன் உட்பட 15 பேர் ம.இ.கா வில் இருந்து நீக்கம்

Palanivellogo

ம.இ.கா தலைவர் டத்தோ ஸ்ரீ பழனிவேல் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கட்சியின் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கீழ்கண்ட 15  பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ம.இ.கா வில் இருந்து 12 மாதத்திற்கு தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டத்தோ ஸ்ரீ டாக்டர் S. சுப்ரமணியம்

டத்தோ M. சரவணன்

டத்தோஸ்ரீ S. K. தேவமணி

திரு. N. ரவிசந்திரன்

டத்தோ R. கணேசன்

டத்தோ M. தேவேந்திரன்

டத்தோ KRA நாயுடு

டத்தோ V. M. பஞ்மூர்த்தி

திரு.P. மணிவாசகம்

திரு.S. ஆனந்தன்

திரு.M. மதுரைவீரன்

டத்தோ  M. அசோஜன்

திரு.. சண்முகம்

திருமதி மோகனா முனியாண்டி

K.R. பார்த்திபன்

இந்த 15 நபர்களும் இடைநீக்க கடிதங்கள் நேற்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று டத்தோ ஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார்.

மஇகா தலைவருக்கு இருக்கும் அதிகாரத்தின் படி மஇகா அரசியல் சட்டப் பிரிவு 61.1 கீழ் இந்த 15 பேரின் இடைநீக்கம் உடனடியாக அமுலுக்கு வரும் என்றும் டத்தோ ஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 16/06/2015 அன்று உயர் நீதி மன்றத்தில் ஆர்.ஓ.எஸ்ஸூக்கு எதிராக ம.இ.கா. தொடுத்த வழக்கு செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட்டது.ஆர்.ஓ.எஸ்ஸின் உத்தரவு செல்லுபடியாகும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதன்படி ம.இ.கா மறு தேர்தல் நடத்த வேண்டியது அவசியமாகிறது.