மே 18, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வாகோ நகரில் உணவு விடுதி ஒன்றில் பைக் ஓட்டி குழுக்களிடையே நடந்த மோதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். வாகோ நகரில் உள்ள ட்வின் பீக்ஸ் ரெஸ்ட்டாரண்ட்க்கு உணவு விடுதி வழக்கம் போல் நேற்றிரவும் பரபரப்பாக இருந்தது. அப்போது திடீரென உணவு விடுதிக்குள் இருந்த 3 பைக் ரேசிங் குழுவைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். அங்கிருந்து சண்டையிட்டபடி டெக்சாஸ் மார்க்கெட் வணிக வளாகத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு வந்து துப்பாக்கி, கத்தி, செயின் என்று தங்கள் கையில் இருந்த ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டனர். மோதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் ஒருவர் மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் வழியில் இறந்ததாகவும் போலீஸ் அதிகாரி பாட்ரிக் ஸ்வான்டன் தெரிவித்தார். 18 பேர் வரை காயமடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Previous Post: எனக்கு குழந்தை இல்லை அஞ்சலி
Next Post: தமிழகத்தில் கனமழை