மே 11, ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் கோடை வெயில் வறுத்து எரித்துவிடும்.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் கடந்த 4–ந்தேதி தொடங்கியது என்றாலும் முந்தைய ஆண்டுகளை போல வெயிலின் தாக்கம் அதிக அளவு இல்லை. சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் அளவு குறைவாகவே இருந்தது. பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வருகிற ஜூன் மாதம் 1–ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.