என் தமிழ்

தேசிய ஆங்கில மொழித்திறன் போட்டி : கேஸ்டில்ஃபீல்ட் தமிழ்ப்பள்ளி மாணவி நைன்திகா விக்னேஸ்வரா சாதனை

சிலாங்கூர், 27 அக்டோபர் 2026 : சிலாங்கூர் கேஸ்டில்ஃபீல்ட் தமிழ்ப்பள்ளியின் மூன்றாம் ஆண்டு அருண் வகுப்பு மாணவி நைன்திகா விக்னேஸ்வரா, தேசிய ஆங்கில மொழித்திறன் போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். மாணவியின் இந்தச் சிறப்பான சாதனையைப் பாராட்டிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PIBG), அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தது. மேலும், அவரது முயற்சியும் திறமையும் தொடர்ந்து சிறந்த வெற்றிகளைப் பெற உதவும் என நம்பிக்கை தெரிவித்தது.

நைன்திகா எதிர்காலத்திலும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கவும், மற்ற மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழவும் பள்ளி நிர்வாகமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளன.

Scroll to Top