ஏப்ரல் 16, திரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சில மாதங்களுக்கு முன் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த மார்ச் மாதமே அவர்களது திருமணம் நடக்க உள்ளதாக முதலில் பேச்சு எழுந்தது. இந்நிலையில் தனது இணைய தள பக்கத்தில் திரிஷா மணக்கோலத்தில் ஒரு ஸ்டில் வெளியிட்டார். திரிஷாவுக்கு வருணுடன் திருமணம் ஆகிவிட்டது. அப்போது அவர் மணக்கோலத்திலிருந்த தோற்றத்தைத்தான் ஸ்டில்லாக வெளியிட்டிருக்கிறார் என பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்தான் அது புதியபடமொன்றிற்காக அவர் திருமண கோலத்திற்காக அணிந்த மேக்அப் என்று தெரிந்தது. அதன்பிறகே பரபரப்பு அடங்கியது.
Next Post: அதிநவீன ஏவுகணையை சீனாவுக்கு விற்கிறது ரஷ்யா