என் தமிழ்

லிபியா படகு கவிழ்ந்து விபத்து 400 பேர் பலி

ship21

ஏப்ரல் 15, லிபியா அருகே இருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பாவுக்கு வந்தவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 400 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர்.

முன்னதாக இத்தாலியின் கடலோர காவல்படை திங்கட்க்கிழமை அன்று இந்த விபத்தில் சிக்கிய 144 பேரை உயிருடன் மீட்டதாக தெரிவித்தனர். அதேபோல் விபத்தில் இறந்து போனவர்களின் 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 540 பேருக்கு மேற்பட்டவர்களுடன் லிபியாவில் இருந்து கிளம்பிய 24 மணி நேரத்திற்கு பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்திற்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை.

Scroll to Top