ஏப்ரல் 8, மார்க்கெட் டல்லடித்த பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் தமன்னா, ஸ்ரேயா, இலியானா, பிரியாமணி போன்ற பல நடிகைகள் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிம்பு, பிரபுதேவா என இருவரிடம் காதல் தோல்வி அடைந்து இனி நடிப்பதில்லை என்ற முடிவுக்கும் வந்து ஒதுங்கிய நயன்தாரா மீண்டும் ரீஎன்ட்ரி ஆனதும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அவரால் மட்டும் இது எப்படி முடிந்தது என்ற ரகசியம் தெரியாமல் இன்டஸ்ரியில் பலர் குழப்பிக்கொண்டிருக்கின்றனர். அவரது விடாமுயற்சிதான் இதற்கு முக்கிய காரணம் என நயன்தாராவின் வட்டாரம் விளக்குகிறது. காதல் முறிவு என்றதும் மனம் உடைந்து முடங்கிவிடாமல் வாழ்ந்து காட்டுவது என்ற திட எண்ணத்தை அவர் எடுத்ததுடன் சிம்புவுடன் மீண்டும், ‘ இது நம்ம ஆளு’ படத்தில் நடித்துள்ளார்.
நயன்தாரா சம்பளம் இரண்டரை கோடி
