ஏமனில் சிக்கித் தவித்த 350 இந்தியர்கள் மீட்பு

ஏமனில் சிக்கித் தவித்த 350 இந்தியர்கள் மீட்பு

yeman

ஏப்ரல் 1, உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெறும் ஏமனில் சிக்கித் தவித்த 350 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அரசுப் படைகளை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியதால் அதிபர் அபேத் ராபோ மன்சூர் காதி தப்பிச்சென்றுவிட்டார். ஏமன் நாட்டில் 4,000க்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் ஏராளமான பேர் நர்சுகளாக வேலை செய்கிறார்கள். இதனால் அவர்களை பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இந்நிலையில் ஏமனில் சிக்கி தவித்த 350 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐ.என்.எஸ். சுமித்ரா கப்பல் ஏடன் துறைமுகத்தில் இருந்து சுமார் 350 இந்தியர்களுடன் வெளியேறியதாகவும், அவர்கள் ஜிபோட்டியில் இருந்து இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் தாயகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.