திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3.24 கோடி உண்டியல் வசூல்

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3.24 கோடி உண்டியல் வசூல்

Tirupati

ஏப்ரல் 1, தற்போது பள்ளியில் தேர்வுகள் நடைபெற்று வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்ய முடிகிறது. பக்தர்கள் காத்திருக்காமல் கோவிலுக்கு வந்த உடனேயே தரிசனம் செய்கிறார்கள். இதனால் பக்தர்கள் முழு திருப்தியுடன் தரிசனம் செய்து திரும்புகிறார்கள்.

பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் உண்டியல் வசூல் குறையவில்லை. வழக்கத்தை விட அதிகமாகவே உண்டியல் மூலம் வருமானம் கிடைக்கிறது. நேற்று ஒரே நாளில் ரூ.3 கோடியே 24 லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்திருந்தது. மேலும் பெயர் வெளியிட விரும்பாத பக்தர் ஒருவர் ரூ.28.50 லட்சம் நன்கொடை அளித்தார்.