விக்ரமுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி: காஜல் அகர்வால்

விக்ரமுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி: காஜல் அகர்வால்

kajal-agarwal-success-secret

மார்ச் 18, காஜல் அகர்வால் தற்போது முதல் முறையாக விக்ரமிற்கு ஜோடியாக ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல கதாநாயகிகளின் கடுமையான போட்டிக்கு இடையில் இந்த வாய்ப்பு அவருக்கு கிட்டி உள்ளது. இதுகுறித்து காஜல் அகர்வால் கூறும்போது, விக்ரமுடன் நடிக்கப் போவதை நினைக்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விக்ரமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நடிப்பில் ஈர்க்கப்பட்டேன். திறமையான நடிகர். கடினமாக உழைக்கக் கூடியவர். அவரோடு சேர்ந்து நடிப்பதை ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கதையும் எனது கேரக்டரும் அற்புதமாக இருக்கிறது. இந்த படத்தில் நடிப்பது நிஜமாகவே எனக்கு உற்சாகத்தை அளித்துள்ளது என்றார்.