மார்ச் 12, இந்தோனேஷிய பத்திரிகைகளில் வெளியான ஒரு விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அதில் இப்படி கூறப்பட்டு இருந்தது. ஜாவா தீவில் ஸ்லெமன் என்ற இடத்தில் இருக்கும் ஒற்றை மாடி வீடு; இரண்டு படுக்கை அறை; இரண்டு குளியலறை; கார் நிறுத்தும் இட வசதி மற்றும் சிறிய குளத்துடன் கூடிய வீடு விற்பனைக்கு கிடைக்கும். இந்த வீட்டை வாங்குபவருக்கு ஒரு மனைவி இலவசம்!’’ரூ.45 லட்சம் மதிப்புள்ள இந்த வீட்டுடன் தன்னை இலவசமாகக் கொடுக்க முன் வந்து இருப்பவர், வினா லியா என்ற 40 வயதான விதவை.அவரது வீடு விற்பனை ஆகிறதோ இல்லையோ, அவரது விளம்பரம் இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
Previous Post: காதலிக்க நேரமில்லை-தமன்னா