முன்ஜென்மத்தை பற்றி கூறிய 3 வயது சிறுவன்

முன்ஜென்மத்தை பற்றி கூறிய 3 வயது சிறுவன்

showposter

மார்ச் 11, கோலன் ஹெட்ஸ் என்ற பகுதியில் வசித்துவரும் 3 வயது சிறுவன் ஒருவன் தான் முன்ஜென்மத்தில் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை தனது பெற்றோரிடம் விவரித்துள்ளான். குழந்தை ஏதோ விளையாட்டாக கூறுகிறான் என்று எண்ணிய அவனது பெற்றோரும் அவன் கூறிய எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதோடு நிறுத்தாத அந்த சிறுவன் தான் கோடாரியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அந்த கோடாரி புதைத்த இடத்தை காட்டுகிறேன் வாருங்கள் என்று பெற்றோரை அழைத்து சென்றுள்ளான். மேலும், பிறக்கும்போதே அவனுக்கு நெற்றியில் இருந்த தடயத்தை காட்டி என்னை கோடரியால் இங்கு தான் தாக்கினார்கள் என்று கூறியுள்ளான்.
அவன் கூறியதை போலவே நெற்றியில் காயத்திற்கான தடயம் இருந்தது குறிப்பிடத்தக்கது.