மார்ச் 11, பாகிஸ்தானில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அணு ஆயுதங்களை தாங்கி கொண்டு 2,750 கி.மீ தூரம் வரை செல்லும் ஷகீன் 3 என்ற ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை அரபிக்கடலில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக தாக்கியது. கடந்த மாதம் ராத் என்ற ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. ராத் 350 கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் படைத்தது.
Previous Post: முன்ஜென்மத்தை பற்றி கூறிய 3 வயது சிறுவன்