மார்ச் 10, நாகாலாந்தில் இன்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளுக்கு 48 மணி நேர தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாகலாந்து மாநிலம் திமாபூரில் பலாத்கார குற்றவாளி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் இன்டர்நெட் மூலம் பரவுவதாக நாகாலாந்து அரசுக்கு தகவல் கிடைத்தது. இதனால் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் என்பதைக் கருத்தில் கொண்டு இன்டர்நெட் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 48 மணி நேரத்துக்கு தடை விதித்துள்ளது.இது தொடர்பான அறிவிப்பை அனைத்து பத்திரிகைகளிலும் அரசு வெளியிட்டுள்ளது.
Previous Post: ஸ்ருதிஹாசனின் திடீர் முடிவு