நயன்தாரா திறமையானவர்: ஜெயம் ரவி கருத்து

நயன்தாரா திறமையானவர்: ஜெயம் ரவி கருத்து

nayanthara1

மார்ச் 9, நயன்தாரா திறமையான நடிகை என்று ஜெயம் ரவி கூறியுள்ளார். ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இப்படத்தை எம்.ராஜா இயக்குகிறார். நயன்தாராவுடன் நடிப்பது குறித்து ஜெயம் ரவி கூறியது: நயன்தாரா எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் எனக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது அசின் பிரபலமாக இருந்ததால் அவரை நடிக்க வைத்து விட்டோம். இப்போது தனி ஒருவன் படத்தில் சேர்ந்து நடிக்கிறோம். நயன்தாரா திறமையான நடிகை மேலும் அழகாகவும் இருக்கிறார் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.