என் தமிழ்

குன்னூரில் பலத்த மழை

Rain01

மார்ச் 9, நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 6ம் தேதி இரவு மட்டும் 175 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன் மலை ரயில் பாதையிலும் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் 3 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. 100க்கு மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து சேறும் சகதியுமாக மாறியது. இதனால் விடிய விடிய மக்கள் தூங்காமல் தங்களது உடமைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

Scroll to Top