மார்ச் 5, MH370 விமானம் வரும் மார்ச் 8-ஆம் தேதியுடன் காணாமல் போய் வரும் 1 வருடம் நிறைவடைவதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஆஸ்திரேலியாவுக்கான மலேசிய உயர் ஆணையர் டத்தோ சைனால் அபிடின் அஹ்மாட், மற்றும் விமானத்தின் தேடல் பணியில் ஈடுபட்டுள்ள மலேசியர்கள் முன்னிலையில் 1 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விமானம் தேடல் பகுதி உலகிலேயே அதிக கொந்தளிப்பு மிக்கப் பகுதியாகத் திகழ்வதால் கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் தேடல் பணிகள் பெரிய அளவில் நடைபெறும் என்பதில் தாம் உறுதியளிக்க விரும்பவில்லை என பிரதமர் டோணி அபோட் தெரிவித்தார்.